லட்சுமி கடாட்சம் - செல்வம் நிலைத்திருக்க 75 வழிபாட்டு குறிப்புகள் 1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும். 2. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். 3. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். 4. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும். 5. இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ணிய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும். 6. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும். 7. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். 8. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் ...